24. காரைக்கால் அம்மையார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 24
இறைவன்: கைலாசநாதர்
இறைவி : சுந்தராம்பிகை
தலமரம் : ?
தீர்த்தம் : ?
குலம் : வணிகர்
அவதாரத் தலம் : காரைக்கால்
முக்தி தலம் : திருவாலங்காடு
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : பங்குனி - சுவாதி
வரலாறு : சோழநாட்டில் காரைக்கால் நகரில் தனதத்தனார் என்பாருக்குப் புனிதவதியார் என்னும் திருமகளார் திருஅவதாரம் செய்தார். மணப்பருவம் வந்ததும் தந்தையார் பரமதத்தன் என்னும் வணிகனுக்குத் திருமணம் செய்து வைத்தார். பரமதத்தனுக்கு ஒரு நாள் இரு மாங்கனிகள் கிடைத்தன. அவற்றை வீட்டிற்கு அனுப்பி வைத்தான். புனிதவதியார் வீடு தேடி அமுது கேட்டு வந்த ஒரு சிவனடியாருக்கு அக்கனிகளில் ஒன்றை அளித்தார். மதியம் உணவு அருந்தும்போது பரமதத்தன் கொடுத்தனுப்பிய கனிகளில் ஒன்றை வைக்குமாறு கூற புனிதவதியாரும் வைத்தார். அதன் சுவையில் மயங்கிய அவன் இன்னொரு கனியையும் வைக்குமாறு வேண்ட மனைவியார் செய்வதறியாது திகைத்தார். உண்மையைச் சொன்னால் கோபிப்பாரோ என நினைத்து உள்ளே சென்று இறைவனிடம் முறையிட அவர் கையில் ஒரு கனி வந்து நின்றது. இறைவன் கருணையை வியந்த அவள் அதனைக் கணவனுக்கு இட்டாள். முந்தைய பழத்தை விட இது சுவை கூடுதலாக இருந்ததால் அதன் காரணம் என்ன என்று வினவ அவளும் நடந்தவற்றைக் கூறினாள். இறைவன் அருள் பெற்ற பெண் என்று கருதி அவளைப் பிரிகிறான் பரமதத்தன். வாணிபம் செய்து சிலகாலம் கழித்து வருவதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறுகிறான். சென்றவன் சிலகாலம் கழித்து வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு குழந்தையோடு வாழ்ந்து வருகிறான். இதனை அறிந்த புனிதவதியார் மனம் வெறுத்து இறைவனிடம் தன் அழகை நீக்கி பேய் உருவம் வேண்டிப் பெறுகிறார். கயிலைக்குத் தன் தலையால் நடந்து சென்றார். பல பாடல்கள் இயற்றுகின்றார். அவை பதினோராம் திருமுறையின்கண் வைக்கப்பட்டுள்ளன. இறைவனால் அம்மையே என அழைக்கப்பட்டவர். காலத்தால் முற்பட்டவர். இறைவன் ஆடுகின்றபோது அவன் அடியின் கீழ் இருந்து களிக்கும் பேறு பெற்றவர்.
முகவரி : அருள்மிகு. கைலாசநாதர் திருக்கோயில், காரைக்கால்– 609602 புதுவை மாநிலம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : திரு. மலையப்பெருமாள்
தொலைபேசி : 04368-227203

இருப்பிட வரைபடம்


தலையினால் நடந்து சென்று சங்கரன் இருந்த வெள்ளி 
மலையின் மேல் ஏறும் போது மகிழ்ச்சியால் அன்பு பொங்கக் 
கலை இளம் திங்கள் கண்ணிக் கண் நுதல் ஒரு பாகத்துச் 
சிலை நுதல் இமய வல்லி திருக் கண் நோக்குற்றது அன்றே

- பெ.பு. 1777
பாடல் கேளுங்கள்
 தலையினால்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க